Advertisment

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம்- மாவட்ட ஆட்சியர் அதிரடி!

Liquor only for those who have been vaccinated - District Collector Action!

தமிழகத்தில் கரோனா காரணமாக ஊரடங்கு வரும் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அரசு சார்பில் 'மெகா தடுப்பூசி முகாம்'' நடத்தப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இந்த தடுப்பு முகாமில் வைக்கப்படும் இலக்கிற்குஅதிகமாகவே தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

Advertisment

இந்நிலையில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மது பானம் வழங்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்கப்படும். தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதலை காண்பித்தால் மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வழங்கப்படும். தடுப்பூசி போடாதவர்களுக்கு மதுபானம் விற்றால் விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisment

District Collector viruthunagar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe