
கோவையில் ஐஸ்க்ரீமில் மதுபானம் கலந்து விற்றுவந்த கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பி.என் பாளையம் அவினாசி சாலையில் உள்ள Rolling Dough Cafe என்ற ஐஸ்க்ரீம் கடையில் மதுபானம் கலந்து ஐஸ்க்ரீம்கள் விற்கப்படுவதாகத் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் சிலர் புகாரளித்த நிலையில் அங்குச் சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது ஐஸ்க்ரீம் தயாரிக்கும் இடத்திலேயே இரண்டு மதுபாட்டில்கள் கிடந்துள்ளது. அதேபோல் அந்த கடையிலிருந்த உணவுப்பொருட்களில் பெரும்பாலானவை காலாவதியாகிக் கிடந்தது தெரிந்தது.
இதனையடுத்து அந்த கடைக்கு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். நேற்று புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்றுஅந்த கடைஆய்வு செய்யப்பட்டுகடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது.
Follow Us