Liquor dealer arrested by kallakurichi police

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரது மகன் ராஜா. இவர்மீது பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே கள்ளச்சாராய வழக்குகள் உள்ளன.

Advertisment

இவர், முன்னதாக சாராயம் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். அப்போது, காவல்துறையினரிடம் “இனிமேல் கள்ளச்சாராய விற்பனையில் எப்போதும் ஈடுபட மாட்டேன்” என உறுதிமொழி அளித்து, காவல்துறையின் நன்னடத்தை சான்றிதழ் பெற்று விடுவிக்கப்பட்டார். ஆனால், காவல்துறையிடம் உறுதி கூறியபடி ராஜா நடந்துகொள்ளாமல், மீண்டும் சாராய விற்பனையில் ஈடுபட்டார்.

Advertisment

இதை சங்கராபுரம் போலீசார் தகுந்த ஆதாரங்களுடன் கண்டுபிடித்து, ராஜாவை கடந்த மாதம் 18ஆம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செஞ்சி கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், நன்னடத்தை மீறிய குற்றத்திற்காக போலீசாரின் பரிந்துரையின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சரவணன், ராஜாவை ஓராண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து செஞ்சி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜா நேற்று (03.09.2021) கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.