Advertisment

மதுபானங்கள் பறிமுதல்... கைது செய்யப்பட்ட டிரைவரை ஜாமீனில் எடுத்த பிரபல நடிகை 

ramya krishnan

சென்னையில் மதுபானக் கடைகள் திறக்க தடை விதிக்கப்படுள்ளது. சென்னையைத் தவிர்த்து பிற பகுதிகளில் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலர் சென்னையைத் தாண்டிச் சென்று மதுபாட்டில்கள் வாங்கி வருவதைத் தடுக்க சோதனைச் சாவடிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில் கிழக்கு கடற்கரைச்சாலையில் முட்டுக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு வாகனசோதனை செய்துக் கொண்டிருந்த கானத்தூர் போலீஸார், அங்கு வந்த இன்னோவா காரை மறித்து, அதில் இருந்த டிரைவரிடம் சோதனையிட வேண்டும் என தெரிவித்தனர்.

Advertisment

அப்போது அந்த காரில் டிரைவர், காரில் ஆக்டர்ஸ் ரம்யா கிருஷ்ணன், அவரது சகோதரி இருப்பதாக தெரிவித்தார். எல்லா கார்களையும் சோதனையிட வேண்டும் என்பது எங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர். அப்போது ரம்யா கிருஷ்ணன், வினயா கிருஷ்ணனுடன் காரை விட்டு இறங்கி சோதனையிடுங்கள் என கூறியுள்ளார்.

Advertisment

காரை சோதனையிட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. உடனே போலீஸார், இது தொடர்பாக அந்த காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமாரை உங்களிடம் விசாரிக்க வேண்டும் என காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை ரம்யாகிருஷ்ணனும் அவரது சகோதரி வினயாகிருஷ்ணனும் ஜாமீனில் அழைத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ரம்யா கிருஷ்ணன் காரில் 8 மதுபாட்டில்கள் உள்பட 96 பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

driver puthuchery car acterss ramya krishnan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe