Advertisment

திருச்சியின் முக்கிய மார்க்கெட்டில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்..! 

Liquor bottles confiscated in Trichy's main market ..!

திருச்சி, காந்தி மார்க்கெட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றுகொண்டிருந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Advertisment

காந்தி மார்க்கெட் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், காவல்துறையினருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சரக்கு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அதில், 54 பெட்டிகளில் 647 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் வரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Advertisment

மேலும், மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்ததோடு அவை கொண்டுவரப்பட்ட வாகனத்தையும் மதுவிலக்கு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவுசெய்து பறிமுதல் செய்தனர்.

liquor trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe