கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் சோதனை சாவடியில் வட்டாச்சியர் முகமது அசேன் மற்றும் உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத்தனிக்கையில் நைனார்பளையத்திலிருந்து அடரி சென்ற மங்களூரை சேர்ந்த சின்னசாமியின் காரை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1,30,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதே சாலையில் பெங்களூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற பெங்களூரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் காரை நிறுத்தி வாகனசோதனை செய்தபோது அவரிடமிருந்து 1,74,500 ரூபாய் உட்பட மொத்தம் 3,04,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.