Skip to main content

திட்டக்குடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் 3 இலட்சம் ரூபாய் பறிமுதல்

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வேப்பூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறுபாக்கம் சோதனை சாவடியில் வட்டாச்சியர் முகமது அசேன் மற்றும் உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகனத்தனிக்கையில் நைனார்பளையத்திலிருந்து அடரி சென்ற மங்களூரை சேர்ந்த சின்னசாமியின் காரை நிறுத்தி வாகன சோதனை செய்தபோது ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற 1,30,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

 

rupee

 
அதே சாலையில்  பெங்களூரிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற பெங்களூரை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் காரை நிறுத்தி வாகனசோதனை செய்தபோது அவரிடமிருந்து  1,74,500 ரூபாய் உட்பட மொத்தம் 3,04,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுக்கட்டாக சிக்கிய பணம்; வாக்காளர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்டதா?

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Bonded money; Carried away to deliver to voters? in hyderabad

 

தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியைக் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

 

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற நவம்பர் 25 ஆம் தேதியும், தெலுங்கானா மாநிலத்தில் 30 ஆம் தேதியும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தெலுங்கானா மாநிலத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே வேளையில், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருட்கள், மது போன்ற பொருட்களை வழங்குவதை தடுக்க தேர்தல் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

அந்த வகையில், தலைநகர் ஐதராபாத்தின் கச்சிபவுலி பகுதியில் பறக்கும் படை காவல்துறையினர் நேற்று (23-11-23) தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை போலீஸார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுக்கள் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸார் அந்த பணத்தைக் கைப்பற்றினர். அப்போது அதில், ரூ.5 கோடி இருந்தது தெரியவந்தது. மேலும், இது தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த பணம் ஒரு வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமானது என்பதும் தெரியவந்தது. 

 

 

Next Story

நகைகள் கொள்ளை; திருச்சி போலீசார் அதிரடி

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

trichy city commissioner press meet for jewellery workshop incident 

 

திருச்சியில் நேற்று ஜோசப் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறையில் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு கிலோ தங்கம், கால் கிலோ வெள்ளி மற்றும் ஒன்றரை லட்சம் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து கோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மூன்று தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற நான்கு மணி நேரத்தில் நகை கொள்ளை அடித்த பரணிக்குமார் (வயது 22), சரவணன் (வயது 22) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு தொடர்பாக இன்று கோட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் சத்திய பிரியா, "கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் ஏற்கனவே 18 வழக்குகளில் தொடர்புடையவர்கள் மேலும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்து மீண்டும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். தனிப்படையினர் மிகச் சிறப்பாக செயல்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நான்கு மணி நேரத்தில் இரண்டு குற்றவாளிகளையும் கைது செய்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுவதையும் பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி உரிய நபர்களிடம் ஒப்படைக்க தற்போது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

 

திருச்சி மாநகரை பொறுத்தவரை இந்த வருடத்தில் மட்டும் கொலை வழிப்பறி திருட்டு உள்ளிட்ட வழக்குகள் என மொத்தம் 45 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 38 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. திருச்சி மாநகரில் தொடர்ந்து கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுப்பதற்காக கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று கூறினார். இந்த பேட்டியின் போது மாநகர காவல்துறை துணை ஆணையர் அன்பு, உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.