/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lions3232111.jpg)
கடலூர் மாவட்டம், சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் உள்ளிட்டபகுதியில் கடந்த மாதம் பெய்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் வீட்டு சுவர் இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பன்னாட்டு லயன்ஸ் சங்கத்தின் சார்பில் அரிசி, மளிகை பொருட்கள், பெட்ஷீட், லுங்கி, நைட்டி உள்ளிட்ட தலா ரூபாய் 1,500 மதிப்புள்ள நிவாரண தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி சிதம்பரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் மாவட்டத்தின் ஆளுநர் சுரேஷ் நீலகண்டன் கலந்துகொண்டு பாதிக்கப்பட்ட சுமார் 100 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் செல்வகுமார், LCIF ஒருங்கிணைப்பாளர் திருமால், GAT ஒருங்கிணைப்பாளர் விஜய்பானு, லயன்ஸ் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் தலேடா, இணை ஒருங்கிணைப்பாளர் வெங்கடசுந்தரம்உள்ளிட்ட சங்கங்களின் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் கலந்துகொண்டு நிவாரண உதவிகளை வழங்கினர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)