/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/hand-in_83.jpg)
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று (04.10.2021) இரவு முதல் இன்று பிற்பகல் வரை மழை பெய்தது. அதுபோல், சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்தது. சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த சாமியார்பேட்டை கடற்கரையில் இன்று காலை 9.30 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது இடிமின்னலுடன் மழை பெய்தது. அப்போது அங்கு மீன் பிடித்துகொண்டிருந்த பாலகிருஷ்ணன் (55), ராமலிங்கம் (45), காளியப்பன் (60) உள்ளிட்ட சில மீனவர்கள்மீது இடி விழுந்தது. இதில், பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். மற்ற மீனவர்களுக்கு காயங்கள் ஏற்பட்டன. இதனைக் கண்ட அங்கிருந்த மற்றவர்கள், பாலகிருஷ்ணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பாலகிருஷ்ணன் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இவருடன் மீன்பிடித்த ராமலிங்கம், காளியப்பன் உள்ளிட்ட சில மீனவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)