j

சிதம்பரம் அருகே முகையூர் கிராமத்தைச் சேர்ந்த பாலதண்டாயுதம்(55) விவசாயியான இவர் வியாழக்கிழமை அதே ஊரில் உள்ள அவரது வயலில் நேரடி நெல்விதைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாலை 5 மணியளவில் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் என இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி பாலதண்டாயுதம் உடல் கருகிய நிலையில் சம்பவ இடத்திலேயேஉயிர் இழந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடலைச் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். இதுகுறித்து புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Advertisment

அதேபோல் புவனகிரி அருகே உள்ள பிரசன்னராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன்(30) விவசாயி, இவர் வயலில் நெல் விதைப்புப் பணியில் ஈடுபட்டபோது மாலை நேரத்தில் பெய்த மழையில் மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே பலியானார். இவரது உடலும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருதூர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.