திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தைமீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்துவருகிறது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தற்போது மீட்பு பணி செய்து வரும் இடத்தில் லேசாக மழை பொழிந்த நிலையில் தற்போது அந்த தூரல்மழையும் நின்றுள்ளது. மீட்புப் பணியில் குழந்தையின் தலையானது கீழே குனிந்தபடி இருப்பதால் குழந்தையின் தலையின் மேற்புறத்தில் மட்டுமே மணல் இருக்க வாய்ப்புண்டு. கண், மூக்கு ஆகிய பகுதிகளில் மணல் படாமல் இருப்பதாகவும், அதனால் சுஜித் சுவாசிப்பதற்கான வாய்ப்புகள் அதிகப்படியாக இருப்பதாகவும் மீட்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு மேல் அந்த கருவிமூலம் மீட்க முயற்சித்தால் மண் சரிவு ஏற்படும் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே ஹைட்ராலிக் கருவியின் மூலமும், அண்ணா பல்கலைக்கழக குழுவினரின் அந்த ரோபோ கருவி மூலமும் மீட்பதற்கான அந்த பணிகள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அதுபோல் குழந்தை 75 அடியிலேயேதான் இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளது. தற்போது ஒஎன்ஜிசி ஆழ்துளை தோண்டும் வாகனம் ஒரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்தடையும் என்றும் கூறப்படுகிறது. அந்த வாகனத்தின் மூலம் சுரங்கம் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டு குழந்தை மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும்.குழந்தையின் கை ஹைட்ராலிக் கருவியினால் இறுககட்டப்பட்டதால் இதற்கு மேல் குழந்தை கீழே செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.