
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்துள்ள கீழக்கல்பூண்டியைச் சேர்ந்த அழகுவேல் மனைவி கருப்பாயி (45). இவரது கணவர் இறந்துவிட்டார். அதனால் இவர், கீழக்கல்பூண்டியில் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்துவந்தார். அப்போது அங்கு அவருடன் வேலை பார்த்துவந்த செல்வராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில், கருப்பாயியிக்கு வேறு நபருடன் பழக்கம் உள்ளது என்று செல்வராஜிற்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் அவரை கடந்த (30-07-2020) அன்றுவடகராம்பூண்டி ஏரிக்கரையில் அமைந்துள்ள அய்யனார் கோயிலில் தனியாகப் பேச அழைத்துச் சென்று குழவிக் கல்லைத் தலையில் போட்டுக் கொலை செய்தார். ராமநத்தம் போலீசார் கொலை செய்தவர் யார் என்பது தெரியாமல் வழக்குப் பதிவுசெய்து தேடிவந்தனர். இந்நிலையில்கடலூர் மாவட்ட கண்ணாணிப்பாளர் சக்தி கணேஷ், சிறுபாக்கம்சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர்.
இந்நிலையில், கருப்பாயி செல்ஃபோன் அழைப்புகளை வைத்து குற்றவாளிகளைத் தேடிவந்தனர். அதில் பெரம்பலூர் மாவட்டம் கை களத்தூர் குமாரசாமி மகன் செல்வராஜ் (40) என்பவர் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவரை ஜம்புலிங்கம் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் (18.12.2021) கைது செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/sp.sekar_.jpg)