Life sentence for worker in 5-year-old girl case in cuddalore

Advertisment

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த வடகரைப் பகுதியைச் சேர்ந்த முருகையன் என்பவரின் மகன் மணிகண்டன் (26). தொழிலாளியான இவர் கடந்த 15.2.2019 அன்று அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் சக குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்றார். பின்னர் அந்த சிறுமியை சமுதாய நலக் கூடத்தில் உள்ள ஒரு அறைக்குள் பூட்டி வைத்து பாலியல் வன்கொடுமை செய்தார்.

இதுபற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுபற்றி சிறுமியின் தாய் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் மணிகண்டனை கைது செய்தனர்.

இந்த வழக்கு, கடலூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்கறிஞர் கலைச்செல்வி ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Advertisment

அதில் இவ்வழக்கில் மணிகண்டன் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பு வழங்கினார்.