Life sentence prisoner passed away

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பனங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் என்ற ராமசாமி(79). இவருடைய மனைவி சகுந்தலா(60). கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் குடிபோதையில் சண்முகம் தனது மனைவி சகுந்தலாவை கோடாரியால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார் சண்முகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisment

அந்த வழக்கில் சண்முகத்துக்கு புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. அதைத்தொடர்ந்து திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சண்முகம், கடந்த 19ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்தநிலையில், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி மத்தியச் சிறை அலுவலர் சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Advertisment