Life sentence to a person in cuddalore

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த சிறுவம்பார் கிராமத்தில் கடந்த 25-12-2018 அன்று அக்கிராமத்தின் சுடுகாட்டு பகுதியில் சைக்கிளில் வந்த மஞ்சமுத்து என்பவரை சொத்து பிரச்சனை காரணமாக வழிமறித்து, அக்கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கருவக்கட்டையால், கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் மஞ்சமுத்து சிகிச்சை பலனின்றி கடந்த 29.12.2018 அன்று உயிரிழந்தார்.

Advertisment

Life sentence to a person in cuddalore

Advertisment

இதுகுறித்து அவரது மனைவி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கானது, விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ராமலிங்கத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார். அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இராமலிங்கம் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.