Advertisment

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள்! 

Life sentence convicts in ariyalur

Advertisment

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வேலாயுதம் நகரில் வசித்து வந்தவர் குணசேகரன். இவர், அப்போது கடலூர் மாவட்டம் திட்டக்குடி பேரூராட்சி செயல் அலுவலராக பணி செய்துவந்தார். இவரது மனைவி பாரதியை கடந்த 2018ஆம் ஆண்டு பட்டபகலில் வீடு புகுந்து கொடூரமாக இருவர் கொலை செய்தனர். இந்த கொலை சம்பவம் அப்போது ஜெயங்கொண்டம் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் 2019ஆம் ஆண்டில் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட அதே பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி, சின்னராசு ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Life sentence convicts in ariyalur

இது சம்பந்தமான வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் தடய அறிவியல் துறை மற்றும் சாட்சியங்கள் ஆகியவை விசாரிக்கப்பட்டு நேற்று இந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் பாரதியை அவர் அணிந்திருந்த 15 பவுன் நகைக்காக கொலை செய்துவிட்டு நகையை பறித்துச் சென்ற ஜெயந்தி, சின்னராசு ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து ஜெயந்தி, சின்னராசு ஆகிய இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறைக்குகொண்டு சென்று அடைத்தனர்.

Ariyalur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe