Advertisment

ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர் தற்கொலை... தமிழகத்தில் தொடரும் சோகம்

ரகதச

ஆன்லைன் சூதாட்டத்தால் சென்னையில் மீண்டும் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் இளைஞர்கள், தற்கொலை செய்துகொள்வது வாடிக்கையாகி வருகிறது. கடந்த வாரம்கூட தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார். அந்த சோகம் மறைவதற்குள் இன்று காலை சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த 41 வயதான தினேஷ் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

இவர் சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பல லட்சம் பணத்தை இழந்து கடனாளி ஆகியுள்ளார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த அவர், கடனைத் திருப்பி தர இயலாத காரணத்தால் தற்போது தற்கொலை முடிவெடுத்துள்ளார். இந்தச் சம்பவம் கோயம்பேடு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் ஆன்லைன் சூாட்டத்திற்கு தமிழகத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று தமிழக முதல்வர் தெரிவித்திருந்த நிலையில், இந்தத் தற்கொலை நடைபெற்றுள்ளது.

Advertisment

sucide
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe