Life imprisonment for labourer

Advertisment

வாழப்பாடி அருகே, சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள சந்திரபிள்ளைவலசு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (31). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2014ம் ஆண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் விளையாடிக் கொண்டிருந்த 6ம் வகுப்பு மாணவனை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். அந்தச் சிறுவனை பலமுறை மிரட்டி அவ்வாறு மிருகத்தனமாக நடந்துள்ளார்.

இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் ஹரிகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி, சிறுவனிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட ஹரிகிருஷ்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜூலை 28ம் தேதி தீர்ப்பு அளித்தார். மேலும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.