இன்று (04.05.22) 3.5 சதவீத எல்.ஐ.சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுக்க எல்.ஐ.சி ஊழியர்கள் காலை 11.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இரண்டு மணி நேரம் வேலை நிறுத்த வெளிநடப்பு போராட்டம் நடத்தினர். அதன்படி சென்னை, அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி. ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், எ.ஐ.பி.இ.எ. பொதுச் செயலாளர் வெங்கடாச்சலம், சங்கத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisment