புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வந்த நூலகத்திற்கு பள்ளியில் படிக்கும் சுமார் ஆயிரம் மாணவிகளும் இணைந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பில் ஆயிரம் புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைத்து நூலகத்தை விரிவாக்கம் செய்தனர். பாடப் புத்தகங்களுடன் பொது அறிவு, அறிவியல், வரலாறு, கல்வி, வேலைவாய்ப்பு போன்ற புத்தகங்கள் புதிய வரவாக வைக்கப்பட்டது. அதாவது பள்ளி படிப்புடன் நூலகத்தில் உள்ள புத்தகங்களையும் சேர்த்து படிக்கும் போது அரசு வேலைகளுக்கானதேர்வுகளுக்கும் தயாராக முடியும் என்பதால் நூலகம் அமைப்பதாக மாணவிகள் கூறினார்கள். இதேபோல ஒவ்வொரு ஆண்டும் மாணவிகள் இணைந்து புதிய புத்தகங்களை வாங்கி வைப்போம் என்றனர்.

Advertisment

Library of Government School Students: The Science Movement Helped

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

மாணவிகளே இணைந்து நூலகத்தை உருவாக்கி விரிவாக்கம் செய்துள்ள தகவல் அறிந்து அவர்களையும் பள்ளி நிர்வாகத்தையும் பாராட்டும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம், மற்றும் பல தன்னார்வலர்கள் நூலகத்திற்கு புகத்தகம் வழங்க திட்டமிட்டு சேகரித்தனர்.

Advertisment

இந்த நிலையில் வெள்ளிக் கிழமை கவிஞர் முத்துநிலவன் தலைமையில் புதுக்கோட்டை நாணயவியல் கழகம் எஸ்.டி.பசீர் அலி மற்றும் அறிவியல் இயக்கத்தினர் பள்ளிக்கு ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான சுமார் 200 புத்தகங்களை கொண்டு வந்து பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ், மற்றும் ஆசிரியர்கள், மாணவிகளிடம் வழங்கி நூலகம் அமைத்தமைக்கு பாராட்டினார்கள்.

Library of Government School Students: The Science Movement Helped

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இது குறித்த கவிஞர் முத்துநிலவன் கூறும் போது.. கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் பள்ளியில் உள்ள நூலகத்தை பயன்படுத்தி வருவதும், அவர்கள் நூலகத்தை விரிவாக்கம் செய்ய சொந்த செலவில் ரூ. 30 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கி வைத்திருப்பதும் பெருமைப்பட வேண்டிய நிகழ்வு. இதுபோல ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகள் நூலகங்களை உருவாக்கி புத்தகங்களை படிக்க வெண்டும். அப்போது தான் அறிவு வளர்ச்சி பெறும். அதனால் தான் இந்த பள்ளி தொடர்ந்து தேர்வுகளில் சாதித்து வருகிறது. புத்தகங்கள் வழங்குவதுடன் மாணவிகளையும் மாணவிகளை உருவாக்கிய ஆசிரியர்களையும் பாராட்டுகிறோம் என்றார்.

Library of Government School Students: The Science Movement Helped

புத்தகங்களை பெற்றுக் கொண்ட மாணவி சுவாதி.. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக்காக எதையாவது செய்ய வேண்டும் என்பது மாணவிகளின் எண்ணம். அதேபோல தான் முன்னாள்மாணவிகள் தற்போது படிக்கும் மாணவிகளை ஊக்கப்படுத்த பல்வேறு பரிசகளை வழங்கி வருகிறார்கள். ஆனால் நாங்க எங்களுக்கு பின்னால் வரும் மாணவிகளுக்கும் பயனள்ளதாக இருக்க வேண்டும் என்பதால் ஆயிரம் புத்தகங்களை வாங்கி நூலகத்தில் வைத்திருக்கிறோம். அரசுவேலை வாய்ப்புக்காகபடிக்கும் முன்னாள்மாணவிகளும் வந்து படித்து பயன் பெறலாம். இதேபோல இனி ஒவ்வொரு ஆண்டும் புத்தகம் வாங்குவோம். எங்களின் முயற்சியை பாராட்டி அறிவியல் இயக்கம் தற்போது ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான 200 புத்தகங்களை வழங்கி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. புத்தகங்களை படித்து பயனடைவோம் என்றார்.