கடலூர் மாவட்ட நூலக அலுவலரின் அறிவுரையின் படி, வடலூர் பார்வதிபுரம் கிளை நூலகத்தின் சார்பாக உலக புத்தக தினம் 23.04.2018 திங்கட்கிழமை நடை பெற்றது. விழாவிற்கு வாசகர் வட்டத்தலைவர் கே.தண்டபாணி தலைமை தாங்கினார். வடலூர் சுகாதார ஆய்வாளர் வி.பாண்டியராஜன், தலைமை ஆசிரியர் கனகசபை, ஆசிரியர் பயிற்றுனர் ஏழுமலை, நெடுஞ்சாலைத்துறை கல்யாணம், அருள்ஜோதி மற்றும் கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

Advertisment

பள்ளி மாணவர்களிடையே வாசிப்புத்திறனை மேம்டுத்துதல், தினசரி நாட்டு நடப்புகளை பத்திரிக்கை செய்திகள் மூலமாக தெரிந்து கொள்ளுதல், போட்டித்தேர்வுகள் குறித்து தெரிந்து கொள்ள நூலகத்திற்கு செல்லுதல், அதிக அளவில் புதிய உறுப்பினர்கள் மற்றும் புரவலர்களை சேர்த்தல் போன்ற கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டது. விழாவின் நிறைவாக பார்வதிபுரம் கிளைநூலகர் ஆர்.சம்பத் நன்றி கூறினார்.

Advertisment