Advertisment

ஏழு பேர் விடுதலை கோரி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்....

பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும், ஆளுநர் தனக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யக்கோரி, தமிழக ஆளுநருக்கு, ஒரு லட்சம் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisment

7 per

இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றியத் தலைவர் மோரிஸ் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

Advertisment

நிர்வாகிகள் முருக.சரவணன், ஆர்.சுதாகர், ராஜதுரை, திங்கள்கண்ணன், வீரஸ்ரீ மற்றும் பலர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில், விடுதலை செய்யக்கோரும் வாசகங்கள் அடங்கிய நூற்றுக்கணக்கான அஞ்சல் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

Tamil Nadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe