Letter of karur school girl

Advertisment

அண்மையில், கோவையில் பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில், ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் போராட்டத்தின் காரணமாக அந்தப் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனும் கைது செய்யப்பட்டார். இந்த தற்கொலை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், கரூரில் ஒரு மாணவி, பாலியல் தொல்லையின் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கரூர் வெண்ணைமலை பகுதியில் தனியார் பள்ளியில் படித்துவந்த 12ஆம் வகுப்பு மாணவி, தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று (19.11.2021) பள்ளி சென்று மாலை வீடு திரும்பிய நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தற்கொலை தொடர்பாக வெங்கமேடு போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.

இந்நிலையில், அம்மாணவி ஒரு கடிதத்தையும் எழுதியுள்ளார். அதில் அவர், ‘பாலியல் தொல்லையால் இறக்கும் கடைசி பெண்ணாகநான்தான் இருக்க வேண்டும். என்னை யார் இந்த முடிவை எடுக்க வைத்தது என சொல்ல பயமா இருக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார்.