
கரோனா காலத்தில் நீட், ஜெ.இ.இ தேர்வுகளைநடத்தக்கூடாது எனஉச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர பஞ்சாப், ராஜஸ்தான்,சதீஷ்கர்,புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட7 மாநிலங்கள் முடிவு செய்துள்ளது.சோனியாவுடனானஆலோசனைக்குப் பின் ஜார்கண்ட், மகாராஷ்டிர மாநில அரசுகளும் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கரோனாவை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் தமிழகத்தில் நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்குதமிழக அரசு சார்பில்தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகம் அரசு நீட்தேர்வை எதிர்ப்பது உண்மைஎனில் அந்த 7 மாநிலங்களைப் போலஅ.தி.மு.க அரசும் நீதிமன்றத்தை நாட வேண்டும் எனதி.மு.கதலைவர் ஸ்டாலின்வலியுறுத்தியுள்ளதுகுறிப்பிடத்தகுந்தது.
Follow Us