கமலஹசான் கல்லூரிகளுக்கு சென்று அரசியல் பரப்புரை செய்வதை கைவிடே வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மணலியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், காங்கிரஸோடு கமல் இருந்தாலும் சரி, கமலோடு காங்கிரஸ் இருந்தாலும் சரி அது தோல்வி கூட்டணிதான். காங்கிரஸோடு யார் சேர்ந்தாலும் அது தோல்வி கூட்டணியாகத்தான் அமையும் என்றார்.
மேலும் கல்லூரி மாணவர்களை படிக்க விடுங்கள். உங்கள் அரசியல் தளத்தை மேம்படுத்திக்கொள்ள அவர்களிடம் போய் உங்கள் அரசியலை செய்யாதீர்கள் என மக்கள் நீதி மய்யம் தலைவர்கமல்ஹாசனுக்கு வலியுறுத்தினார்.