ADVERTISEMENT

’விரைவில் பாடம் புகட்டுவோம்’-கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்

08:51 AM Nov 10, 2018 | selvakumar

ADVERTISEMENT

திருவாரூர் மாவட்டத்தில் அனுமதியின்றி சர்கார் படத்திற்கு பேனர்வைத்ததாக விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ADVERTISEMENT

நடிகர் விஜய் படமான சர்கார் படம் கடந்த தீபாவளி அன்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் தமிழக அரசின் இலவச திட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாக கூறி அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும்,பொது இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த சர்கார் படப்பேனர்களை கிழித்ததோடு வன்முறையான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கங்கே அதிமுக தொண்டர்கள் ரகளையில் ஈடுபட்டு வரும் நிலையில் காவல்துறையினர் அதனை தடுக்காமல் பாதுகாப்பு அளிப்பதாக பொதுமக்களும் விஜய் ரசிகர்களும் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனுமதியின்றி சர்கார் படத்திற்கு பேனர் வைத்ததாக விஜய்ரசிகர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துவருகின்றனர். அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள நடிகர் விஜய் ரசிகர்கள் 21 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டு பேனர் கிழித்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் விஜய் ரசிகர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

’’ 10 ம்தேதி திருவாரூரில் சர்க்கார் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்கு முன்பு வைக்கப்பட்டிருந்த பேனர்களை அதிமுக ஒ,செ, நா,செ க்களே முன்னின்று கிழித்ததை பொதுமக்கள் அனைவருமே பார்த்தனர். அதே போல் மன்னார்குடியில் அமைச்சர் காமராஜின் உறவினர்கள் கட்சியின் பொறுப்பாளர்களே நேரடியாக காவலர்களின் பாதுகாப்போடு கிழித்ததை பொதுமக்கள் பார்த்தனர். இதன் மீது ஏன் நடவடிக்கை இல்லை. எம்,ஜி,ஆர் நூற்றாண்டு விழா என்கிற பெயரில் மலை மலையாக பேனர்கள், வளைவுகளை குவித்திருந்தனரே அதற்கு யாரிடம் அனுமதி வாங்கினார்கள். அதற்கான அதிகாரம் யார் கொடுத்தது, அதிமுகவினர் மட்டும் தான் இந்த நாட்டு பிரஜைகளா, அவர்கள் பேனர்வைக்க அனுமதி வாங்கிய ஆதாரம் காட்டமுடியுமா, இதற்கு விரைவில் பாடம் புகட்டுவோம்,’’ என்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT