Advertisment

பாசிக பாஜகவை ஆட்சியிலிருந்து ஆகற்றுவோம் - கேம்பஸ் ப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா!

கேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியா என்ற அமைப்பின் செய்தியாளர் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.

Advertisment

இந்த அமைப்பானது ''சகிப்பின்மைக்கு விடை கொடுப்போம்..! பாசிஸத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்'' என்ற முழக்கத்தோடு தேசிய அளவிலுள்ள முக்கிய பல்கலைக்கழங்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்ககள் மத்தியில் எடுத்துசெல்லவேண்டும் என வலிறுத்துகிறார்கள்.

Advertisment

PRESS MEET

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதேபோல் இந்த நான்கரை வருட பாஜக ஆட்சியில் நாட்டின் ஜனநாயகத்திற்கு எதிரான பாசிசம் உள்புகுத்தப்பட்டுள்ளது. மேலும் நாட்டின் பொருளாதாரம் விவசாயம் என அனைத்து முக்கிய துறைகளும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுபற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் பிரச்சாரத்தை மாணவர்கள் முன்னெடுக்க இந்த அமைப்பு வலியுறுத்துகிறது. பாஜகவிற்கு எதிராக கருத்தியல்களை கொண்ட அமைப்புகளை ஒன்றிணைத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் வீழ்த்தவேண்டும் என்ற முன்னெடுப்பையும் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளது.

இன்று நடந்த இந்தகேம்பஸ் ஃப்ரண்ட்ஸ் ஆப் இந்தியாஎன்ற அமைப்பின் செய்தியாளர் கூட்டதில் அந்த அமைப்பின் தமிழ் மாநில தலைவர் முஸ்தபா,தேசிய தலைவர் சிவி.சுகேத் ஆகியோர் பங்கேற்றனர். 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக விற்கு எதிராக மாணவர்கள் திரட்ட திட்டமிட்டுள்ளோம்.பாஜக இல்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும். தேர்தலின் போது மோடி அரசு கொடுத்த வாக்குறுதிகளை இதுவரை செயல்படுத்தவில்லை.

பாஜகவின் பாசிச நடவடிக்கைகளை மாணவர்களின் இயக்கங்களுடன் சேர்ந்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பரப்புரையில் ஈடுபடவுள்ளோம். பாஜகவிற்கு எதிராக அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தருணம் ஏற்பட்டுள்ளது. பாஜகவிற்கு எதிராக மாணவர்கள் ஒன்றிணைய வேண்டும். மக்கள் விரோதப்போக்கை பாஜக அரசு தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது. எங்களுடைய பிரச்சாரத்தை கல்லூரி மாணவர்கள், இளம் வாக்காளர்கள் மூலமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம்என தெரிவித்தனர்.

College students modi campus friend of indi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe