Advertisment

ரஜினி மீதும், தமிழக அரசு மீதும் வழக்கு போடுவோம்!

தமிழ்நாடு பாட புத்தகத்தில் இருந்து ரஜினியின் வரலாற்று பாடத்தை உடனே நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம் தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியன் கோவைக்கிளைதெரிவித்துள்ளது.

Advertisment

தமிழ்நாடு ஜர்னலிஸ்ட் யூனியனின் கோவை மாவட்ட கிளையின் ஆலோசனை கூட்டம் கிணத்துகடவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர் கோவை ராஜன் ஆர்.கே.பூபதி துணை தலைவர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisment

ranjni

இந்த கூட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமரான மோடிக்கும் மற்றும் தமிழகத்தில் வெற்றிபெற்ற எம்பிக்கள் எம்ஏக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும்தமிழ்நாடு 5 ஆம்வகுப்பு பள்ளி பாட புத்தகத்தில் நடிகர் ரஜினி குறித்து உழைப்பால் உயர்ந்தவர் என்று படம் அச்சிடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. ரஜினி நல்ல மனிதர் என்றாலும் அவரால் தமிழ் சமூகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை மேலும் அவரால்தான் தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மாறினார்கள் என்பது வரலாறு.

மேலும் அவர் நடிப்பில் சிவாஜியை போல மேதையும் கிடையாது. ஒவ்வொரு படத்திற்கு அவர் வாங்கும் ஊதியத்தை வெளியே சொல்வதுமில்லை அவரைப்பற்றி சொல்ல இன்னும் நிறைய குறைகள் இருக்கிறது அதனால் தமிழக மாணவர்கள் தவறான பாடத்தை படிக்கும் நிலை ஏற்படும் எனவே ரஜினி குறித்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

case rajinikanth Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe