Skip to main content

“மூன்று துறைகளுடன் இணைந்து பருவ மழையை எதிர்கொள்வோம்” - அமைச்சர் மா.சுப்ரமணியன்

Published on 14/10/2022 | Edited on 14/10/2022

 

"Let's face the monsoon together with the three departments" said Minister M. Subramanian

 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருமடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதனால் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியானது.

 

மருத்துவமனைகளில் மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் ஜூன் மாதம் 47 பேருக்கும், ஜூலை 51 பேருக்கும் டெங்கு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் ஆகஸ்டில் 53 பேருக்கும், செப்டம்பர் மாதம் இந்த 20 நாட்களில் மட்டும் 121 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்படுள்ளது. 

 

ஒருபுறம் இன்ப்ளூயென்சா காய்ச்சலை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. செப்டம்பர் மாதம் 1,784 பேர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் 121 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கையானது இரு மடங்கு அதிகம் என்ற நிலையில், அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக வரக்கூடிய நோயாளிகளுக்கு டெங்கு பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டு இருந்தது.

 

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூரில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சில இடங்களில் மருந்து தட்டுப்பாடு இருப்பது உண்மைதான். அதனால் தான் அந்தந்த அரசு மருத்துவமனைகளே தேவையான மருந்துகளை வாங்கிக்கொள்ள தடையில்லா சான்று தந்தோம்.

 

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பது உள்ளாட்சித் துறையின் பணி. இருந்தாலும் மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மக்கள் நல்வாழ்வுத்துறை, ஊரக உள்ளாட்சித் துறை, நகர்ப்புற உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளுடன் இணைந்து கூட்டங்கள் நடத்தி அதிகாரிகளுடன் ஆய்வு செய்து உத்தரவுகள் பிறப்பித்துள்ளோம். மேலும் துறைகள் இணைந்து நடக்கிறதா என்பதையும் தொடர்ச்சியாய் கண்காணிக்கத்தான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மருத்துவ கல்லூரி முதல்வர்களுடனான கூட்டம் காலை ஏழு மணியில் இருந்து நடைபெற்றது. 

 

மாவட்ட வாரியாக பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, வடகிழக்கு பருவமழைக் காலங்களில் கொசு உற்பத்தியாகும் சூழலை ஏற்படுத்தாத வண்ணம் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்துதல் போன்ற பல விஷயங்கள் தொடர்ச்சியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

 

அன்னூரில் ஒரு மருத்துவமனையில் நான் ஆய்வு மேற்கொண்டேன். அங்கு மழையால் தண்ணீர் தேங்கி இருந்தது. உடனே நீர் வெளியேற்றப்பட்டு விட்டது. எங்கெல்லாம் இந்த மாதிரி சொல்லப்பட்டதோ அங்கெல்லாம் மாவட்ட ஆட்சி நிர்வாகம் செய்து கொண்டு உள்ளது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசு மருத்துவமனையில் தீ விபத்து; அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் 

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

Salem Govt Hospital incident due to electrical leakage in refrigerator says ma.subramanian

 

ஈரோட்டில்  சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டத் தொடக்க விழா மற்றும் மருத்துவத்துறையில் ரூ.3.63 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் மா.சுப்ரமணியன், முத்துச்சாமி, எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் என பலரும் பங்கேற்றனர்.

 

இந்நிகழ்வைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “தமிழகத்தில் 4 மாவட்டங்களில் சாய, தோல் பதனிடுதல் தொழிற்சாலைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் போன்ற காரணங்களால் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு ஈரோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 18 வயதுக்கு மேல் நிரம்பிய ஆண், பெண் அனைவருக்கும் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டது. ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் காணொளி மூலம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

 

ஆண்களை பொறுத்தவரை போதை பொருட்களால் வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலையும், பெண்களுக்கு மார்பகம், கருப்பை புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. புற்றுநோய் 4 நிலைகள் அடிப்படையில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதில் முதல் இரண்டு நிலைகளில் புற்றுநோய் கண்டறியப்பட்டால் குணப்படுத்த முடியும். நான்கு மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை மருத்துவமனை என 1,397 மருத்துவ கட்டமைப்பு மூலம் புற்றுநோய் கண்டறியும் பணிகள் நடைபெறவுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கரூர், அரியலூர் மாவட்டத்தில் தொடங்க கோரிக்கை வந்துள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் குளிர் சாதனப் பெட்டியில் ஏற்பட்ட சிறிய மின் கசிவு காரணமாக தான் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

 

மருத்துவ கழிவை எரிப்பது சுகாதாரச் சீர்கேடு ஏற்படுத்தக் கூடிய ஒன்று. வடகிழக்கு பருவமழையால் சளி, காய்ச்சல் பாதிப்பு கருதி தான் கோவை மாவட்ட கலெக்டர் முககவசம் அணிய பரிந்துரை செய்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையம், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 சதவீதம் காலி பணியிடங்கள் இருப்பது உண்மை. அதை சரி செய்ய 1021 காலி பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள் என 1397 மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக புற்றுநோய் ஆராய்ச்சி மையம் காஞ்சிபுரத்தில் அமைய உள்ளது. இதற்காக 220 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025 க்குள் காசநோய், தொழுநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க முயன்று வருகிறோம். அதை போலவே புற்று நோய் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

 

 

Next Story

"மருத்துவம் மீறிய மகத்துவம் நிறைந்தவர்" - அமைச்சருக்கு பார்த்திபன் பாராட்டு

Published on 30/10/2023 | Edited on 30/10/2023

 

parthiban praised minister ma subramanian

 

இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்ரமணியமிற்கு உயரிய நன்றி. உரிய நடவடிக்கைகள் உடனடியாக எடுத்தமைக்கு. தான் இணைந்திருக்கும் கட்சி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தான் மந்திரியாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் தன் ஆரோக்கியத்தை போலவே தமிழக மக்களின் ஆரோக்கியத்தையும் கண்ணும் கருத்துமாக பேணி காக்கும் மருத்துவம் மீறிய மன மகத்துவம் நிறைந்தவர். அவருக்கு என் மனப்பூர்வ நன்றி" என பதிவிட்டுள்ளார். 

 

அமைச்சர் சுப்பிரமணியன், இன்று காலை இயக்குநர் விக்ரமனின் வீட்டிற்கு சென்று, தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், கால் விரலை கூட அசைக்க முடியாமல் இருந்த விக்ரமனின் மனைவியைப் பார்த்தார். பின்பு, முதல்வரின் அறிவுறுத்தலின் படி 15க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவர்களைக் கொண்டு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.