Let's expel BJP from Tamil Nadu ... Anti-fascist alliance Demontration

Advertisment

நாகப்பட்டினம் காந்திசிலை அருகில் பாசிச எதிர்ப்புகூட்டமைப்பின் சார்பில், 'தமிழகத்தை விட்டுபா.ஜ.கவை விரட்டுவோம்', என்கிற முழக்கத்தைமுன்வைத்து,சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இன்று (12/09/2020)மாலை 4 மணியளவில் துவங்கிய ஆர்ப்பாட்ட மேடையில் அகில இந்திய காங்கிரஸ், ம.தி.மு.க, தேசிய மீனவர் இணையம், பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, நாம் தமிழர் கட்சி, SDPI கட்சி உள்ளிட்ட பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

கண்டன ஆர்ப்பாட்ட நிகழ்ச்சியை குத்புதீன் தொகுத்து வழங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், "கரோனா எனும் கொடிய வைரஸின் கோரப்பிடியில் மக்கள் பரிதவித்துவருகின்றனர், இந்தச் சூழலில் கரோனா ஊரடங்கைச் சாதகமாக்கிக் கொண்ட, மோடி அரசு பல அவசரமான மக்கள் விரோதச் சட்டங்களை நிறைவேற்ற துடிப்பது கண்டிக்கத்தக்கது, என்று அனைவருமே பா.ஜ.கவின் பாசிச போக்கை எதிர்த்து உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அரசு விதித்திருந்த அளவுகள்படி 130 நபர்கள் கலந்துகொண்டனர்.