'நீதிபதிகளின் கயமைத்தனத்தை நாடெல்லாம் பேசுதே' - கீழக்கரையில் ஹிஜாப்பிற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

 'Let the whole country talk about the cruelty of the judges' - Protest in support of hijab in the lower bank

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாவட்ட தலைவர் ஆரிம்கான் தலைமையில், மாநிலச் செயலாளர் அன்சாரி கலந்து கொண்டு ஹிஜாப்பிற்கு எதிராக தீர்ப்பு வழங்கிய கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 'ஹிஜாப் அணிவது எங்கள் உரிமை, கல்வி கற்பது எங்களது உரிமை. அதைத்தடுத்து நிறுத்த எவருக்கும் உரிமையில்லை. எத்தனை துரோகம்... எத்தனை துரோகம்... இஸ்லாமியர்களுக்கு எதிராக எத்தனை துரோகம், நீதித்துறையின் தீர்ப்பு இஸ்லாமியர்களின் குரல்வலையைநெறிக்கும் செயல் அஞ்சமாட்டோம்... அஞ்சமாட்டோம்...'' எனக் கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.

 'Let the whole country talk about the cruelty of the judges' - Protest in support of hijab in the lower bank

'பேசுதே பேசுதே நீதிபதிகளின் கயமைத்தனத்தை நாடெல்லாம் பேசுதே', 'இந்திய நாடு எங்கள் தேசமடா... ஹிஜாப் எங்கள் உரிமையடா' உள்ளிட்ட வாசகங்கள் கொண்ட பதாகைகளும் இடம்பெற்றிருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Hijab karnataka
இதையும் படியுங்கள்
Subscribe