ஜூன் 15ஆம் தேதியான இன்று தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் பலரும் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாமகவின் அன்புமணி ராமதாஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,'தந்தையர் எப்போதும் தியாக தீபங்கள் தான். ஆக்குதல் அன்னையரின் பணி என்றால், அன்பாக வளர்ப்பது தந்தையரின் திருப்பணி. தந்தையர் நாளில் மட்டுமின்றி எல்லா நாளும் தந்தையரை வணங்குவோம்!' என தெரிவித்துள்ளார்.