Advertisment

'வாழ்வதும் வளர்வதும் தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும்'-முதல்வர் வாழ்த்து

 'Let us live and grow as Tamil and as Tamil' - Greetings of the Chief Minister

Advertisment

தமிழகத்தில் பொங்கல் திருநாள் தமிழர்கள் மத்தியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் விழாவாக உள்ளது. இதில் இயற்கையை வணங்கும் விதமாக தை 1-ஆம் தேதியில் சூரிய வழிபாடு, விவசாயத்துக்கு உதவும் மாடுகளுக்கு நன்றியுரைக்கும் விதமாக மாட்டுப் பொங்கலும் விவசாயிகளின் திருவிழாவாக ஆண்டாண்டு காலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

போகியுடன் இன்று (13/01/2025)பொங்கல் கொண்டாட்டம் தொடங்கி இருக்கும் நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அயலக தமிழர் தின விழாவிற்குவாழ்த்து தெரிவித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலது தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'காலங்கள் கடந்தாலும் - நில எல்லைகள் பிரித்தாலும் உணர்வால் உறவால் உள்ளத்தால் என்றும் ஒன்றாகும் தாய்த்தமிழ் உடன்பிறப்புகளோடு அயலகத்தமிழர்_தினவிழா! வாழ்வதும் வளர்வதும் தமிழாகவும் தமிழினமாகவும் இருக்கட்டும்!'என பதிவிட்டுள்ளார்.

Advertisment

Festival pongal
இதையும் படியுங்கள்
Subscribe