Advertisment

''ஒரு வார காலமாக ஏன் ரொம்ப பதறுகிறார்கள் சில பேர் '' - டி.டி.வி.தினகரன்! 

 '' Let the speakers speak ... I do not know when it will happen '' - TTV Dinakaran!

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்எனவியூகங்கள்வெளியாகி வரும் நிலையில், சென்னைதி.நகரில்தங்கியுள்ள சசிகலாவை இன்று (12.02.2021) சந்தித்த பிறகு செய்தியாளர்களைச்சந்தித்த டி.டி.வி.தினகரன், ''அதிமுகவை மீட்டெடுப்பது என்றைக்கு நடக்கும் என தெரியாது. அதிமுகவை மீட்டெடுக்கத்தான் அமுமுகவை ஆரம்பித்தோம். பேசுபவர்கள் பேசட்டும் காலம் அவர்களுக்குப்பதில் சொல்லும்.

Advertisment

ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர்கள், ஒரு முதலமைச்சராக இருப்பவர்கள் எப்படிப் பேச வேண்டும் என்கின்ற ஒரு முறை கூட இல்லாமல், சாலையில் நின்று எப்படி எல்லாம் காட்டுமிராண்டித்தனமாக பேசுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஒருவார காலமாக ஏன் ரொம்ப பதறுகிறார்கள் சில பேர். என்ன காரணம். நாங்களாக வந்தோம், நாங்களாக இருக்கிறோம். நான் ஏதாவது ஒரு வார்த்தை கண்ணியக் குறைவாக பேசி இருக்கேனா. கட்சிஆரம்பித்ததுஅதிமுகவை மீட்டெடுக்க என்று சொன்னது தப்பா" என்றார்.

Advertisment

ammk admk sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe