
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று விடுதலையாகி தமிழகம் திரும்பியுள்ள சசிகலாவின் அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும்எனவியூகங்கள்வெளியாகி வரும் நிலையில், சசிகலாகைப்பற்றநினைக்கும் அதிமுகவுடன் தற்போது தேர்தல் கூட்டணியில் உள்ளது பாஜக.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாஜகதமிழகதலைவர் எல்.முருகனிடம் சசிகலா வருகை மற்றும் அவருக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த எல்.முருகன், ''சசிகலாநேற்றைக்குத்தான் தமிழகம் வந்திருக்கிறார்கள். அவரதுநிலைப்பாடு என்ன என்பதைஅவர் சொன்ன பிறகுஇதைப் பற்றி நான் கருத்துசொன்னால் நன்றாக இருக்கும். அரசியல் கட்சிகளில் எல்லோருக்கும் வரவேற்பு கொடுப்பது இயல்புதான். அதில் புதியதாக ஒன்றும் இருப்பதைப்போல் தெரியவில்லை. இருப்பினும் அவருடைய தேர்தல் நிலைப்பாடு என்னவென்று அறிவித்தபின் நான் கருத்துசொல்கிறேன்'' என்றார்.
Follow Us