Advertisment

'ரோடு குண்டும் குழியுமாகவே இருக்கட்டும்'-பணிகளை தடுத்து நிறுத்திய பெண் எம்.எல்.ஏ

 Let the road be bumpy and potholed'-woman MLA who stopped the works

Advertisment

கன்னியாகுமரியில் அமைச்சர் வருவதை முன்னிட்டு சாலையில் இருந்த பள்ளத்தை மூடி சரி செய்ய முயன்ற ஒப்பந்ததாரரின் பணிகளை எம்எல்ஏ தடுத்து நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் ஒரு பகுதியில் சாலை குண்டும் குழியுமாகக் கிடந்தது. வரும் புதன்கிழமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அந்த பகுதிக்கு வர இருக்கும் நிலையில் அவருடைய பார்வைக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் எம்எல்ஏ தாரகை கத்பட் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் திடீரென சாலை பணிஒப்பந்தத்தை எடுத்தவர் சாலையில் இருந்த பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதனையறிந்த காங்கிரஸ் எம்எல்ஏ அந்த பகுதிக்கு வந்தார்.

''அமைச்சர் விரைவில் வருகிறார். இந்த வேலைய ஸ்டாப் பண்ணுங்க. அமைச்சர் பார்த்ததுக்கு அப்புறமாஇதைசரி பண்ணுங்க. இதையெல்லாம் எடுங்க. முதலில் ரோடு எப்படி இருந்ததோ அப்படியே இருக்கட்டும். எல்லாத்தையும் நாளைக்கு பாத்துக்கலாம். க்ளோஸ் பண்ணுங்க'' என பணிகளை தடுத்து நிறுத்தினார். இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

kanniyakumari Road
இதையும் படியுங்கள்
Subscribe