Advertisment

''யாரும் அந்த கனவுமட்டும் காண வேண்டாம்''-திமுக எம்.பி கனிமொழி

'' Let no one dream that '' - DMK MP Kanimozhi

தமிழ்நாட்டை யாராலும் பிரிக்க முடியாது என தூத்துக்குடி எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

Advertisment

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக தரப்பில் பேசு பொருளாக எழுந்திருக்கும் கொங்குநாடு என்பதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ''தமிழ்நாட்டை யாரும் பிரிக்க முடியாது. யாரும் அந்த கனவு காண வேண்டாம். அதேபோல் நீங்கள் யாரும் அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை'' என்றார்.

Advertisment

மேலும், ''மத்திய அரசு என்பது ஒன்றிய அரசு தான்.அதில் ஒன்றும் தவறில்லை. அது நாட்டுக்கு எதிரான ஒன்றுமில்லை. தமிழகம் ஒரு பாதுகாப்பான ஆட்சியின்கீழ் இருக்கிறது எனவே தமிழகத்தை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை'' என்றார்.

kanimozhi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe