Advertisment

அவதூறு பரப்பும் நோயில் இருந்து அமைச்சர் ஜெயக்குமார் நலம் பெறட்டும்-திமுக பொருளாளர் துரைமுருகன்!

அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின்குற்றச்சாட்டுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இன்று சென்னையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்தார், அப்போது பேசுகையில்,நோய்த் தொற்று பரவ திமுகதான் காரணமாக இருந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டினார். மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் கூட அதிமுக அரசியலில்எந்தக் குறையும் காண முடியாது. முதல்வரின் யதார்த்தமான கருத்துகளைக் கூட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சிக்கிறார்.அதிமுக அரசின்செயல்பாடுகளைமக்கள் பாராட்டும் நிலையில் அதை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

Let Minister Jeyakumar recover from slanderous disease - DMK Treasurer

இந்நிலையில் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாரின்குற்றச்சாட்டுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கரோனா பரவதிமுக தான் காரணம் எனப் பச்சைப்பொய் கூறிய அமைச்சருக்கு கண்டனம். அதிமுக அமைச்சரைப் பிடித்திருக்கும் அவதூறு பரப்பும் நோயில் இருந்து விரைந்து நலம் பெறட்டும். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்எழுப்பியஎந்த கேள்விகளுக்கும் முதலமைச்சர்பதிலளிக்கவில்லைஎனக் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் திமுக பொருளாளர் துரைமுருகன்.

admk corona virus duraimurgan jayakumar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe