Skip to main content

"இதுவே வரலாறு சொல்லும் பாடம்!"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Published on 19/11/2021 | Edited on 19/11/2021

 

"This is the lesson of history!" - Chief Minister MK Stalin!

 

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில் பிரதமர் மோடி, இன்று (19/11/2021) வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

 

உழவர் பக்கம் நின்று போராடியதும், வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராகக் கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமை கொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்