
சென்னையில் கரோனாவிற்கு சிகிச்சை பெறுவோர்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் 15 மண்டலங்களில் கரோனா பாதிப்பால் 2,176 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனாவால் பாதிக்கப்பட்ட 1,02,958 பேரில் 88,826 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதனால் தற்பொழுது சென்னையில் மட்டும் கரோனாவிற்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,953 என 12 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
சென்னையில் 59.17 சதவீதம் ஆண்கள், 40.83 சதவீதம் பெண்கள் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்தனர். சென்னையில் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 1,357 பேருக்கு தற்போது சிகிச்சை நடைபெற்று வருகிறது. அதேபோல் அண்ணாநகர் 1,750, தேனாம்பேட்டை 900, ராயபுரத்தில் 871, திரு.வி.க. நகர் 931, தண்டையார்பேட்டை 661, திருவெற்றியூர் 453, மணலி 113, மாதவரம் 619, ஆலந்தூர் 561, அடையாறு 944, பெருங்குடியில் 526 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.