தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 95 ஆக பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கை 118 ஆக பதிவான நிலையில் இன்றைய ஒருநாள் பாதிப்பு சற்று குறைவாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 41,933 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 35 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 38,023 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 430 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 580 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழாக குறைந்துள்ள குறிப்பிடத்தக்கது.