Advertisment

அரசுக் கல்லூரியில் புகுந்து அட்டகாசம் செய்யும் சிறுத்தைகள்; வைரலாகும் வீடியோ 

leopards entering government college Video goes viral social media

கோவை மாவட்டம் வால்பாறை டவுன் பகுதிக்கு அருகே உள்ளது கூட்டுறவு காலனி. சமீபகாலமாக, வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்வன விலங்குகளின்அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள், சிறுத்தைகள், கரடிகள் போன்ற வன விலங்குகள்மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்குள்ளும்குறிப்பாக விவசாய நிலங்களை நோக்கியும்வரத்துவங்கி விட்டன.

Advertisment

இதனால், அங்கு வசிக்கும் பொதுமக்கள், காலையிலும் மாலையிலும் ஒருவித அச்சத்துடனே வீட்டைவிட்டு வெளியே வருகின்றனர். இந்நிலையில், வால்பாறை அரசு கல்லூரி வளாகத்தில் நுழைந்த இரண்டு சிறுத்தைகள்கழிப்பறை பகுதியில் அட்டகாசம் செய்துள்ளது. அந்தக்காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

Advertisment

இந்த சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்துவால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள், சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்டுஅதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் பொது மக்களையும் தாக்கக்கூடிய சூழல் நிலவி வருகிறது. அதே சமயம், வால்பாறை டவுன் பகுதிகளில் ஆடு, கோழி உள்ளிட்ட வீட்டு வளர்ப்பு பிராணிகள் மட்டுமின்றிகாட்டுப் பன்றிகளும்அதிகளவில் வளர்க்கப்படுகிறது.

அதனால், இரவு நேரங்களில் ஊருக்குள் நுழையும் வன விலங்குகள், வீட்டில் வளர்க்கப்படும் பிராணிகளை பிடிப்பதற்காகஅதிகளவில் உலா வருகிறது. இதனால் பதற்றமடையும் கிராம மக்கள்ஊருக்குள் நுழையும் வன விலங்குகளைகூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றுசேர்ந்துவனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Coimbatore leopard
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe