The leopard was caught in thiruppattur

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் பள்ளியில் நேற்று (14-06-24) மாலை சிறுத்தை ஒன்று புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கூண்டு வைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணி நடைபெற்று வந்தது தொடர்ந்து சிறுத்தை கார் ஷெட் ஒன்றில் தஞ்சம் அடைந்தது. வனப்பகுதிகளே சுற்றிலும் இல்லாத நகர் பகுதியில் சிறுத்தை எவ்வாறு வந்தது என்பது பொதுமக்கள் மற்றும் வனத்துறையினர் இடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Advertisment

சிறுத்தை புகுந்த அந்த கார் ஷெட்டில் இரண்டு கார்களில் மொத்தமாக ஐந்து பேர் சிக்கி இருந்தனர். சிறுத்தை அச்சுறுத்தலால் 5 மணி நேரத்திற்கு மேலாக காருக்குள்ளேயே இருந்த அவர்கள் வெளியே வர முடியாமல் தவித்து வந்தனர். இதனையடுத்து, பலமணிநேர போராட்டத்திற்குப் பின் வனத்துறை உதவியுடன் நேற்று இரவு ஐந்து பேரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து சிறுத்தையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறை தீவிரம் காட்டி வந்தது. இதனால் அங்கு அதிகப்படியான வனத்துறை அதிகாரிகள் கூடியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisment

இந்த நிலையில், வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசியை செலுத்திய நிலையில், 11 மணி நேரத்திற்குப் பின் சிறுத்தை பிடிபட்டது. இதனால் பொதுமக்கள் தற்போது நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளனர்.