forest

Advertisment

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

நீலகிரி மாவட்டம் கைவட்ட அருகே வீட்டில் புகுந்த சிறுத்தையால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கைவட்ட பகுதியை சேர்ந்தவர் ராயின். அவரது வீடு ஒரு காபி தோட்டத்திற்கு நடுவே அமைந்துள்ளது. கடந்த ஒரு மணி நேரத்திற்கு முன்பு ராயின் வழக்கமான வேலைகளை செய்துகொண்டிருந்தார். அப்போது கட்டிலுக்கு கீழ் ஏதோசத்தம்கேட்க கீழே பார்த்தபோது, கீழே ஒரு சிறுத்தை பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ந்த ராயின்குடும்பத்தாருடன் சிறுத்தையை உள்ளே வைத்து பூட்டிவிட்டு வெளியே வந்துவிட்டார்.

Advertisment

இந்த செய்தி அறிந்து அப்பகுதிமக்கள் அந்த வீட்டிற்கு சென்று சிறுத்தை பதுங்கி இருப்பதை கதவில் உள்ள துளைகள் வழியாகடார்ச் லைட் மூலம் பார்த்து வருகின்றனர். சம்பவம் அறிந்து வனத்துறையினர்மக்களை அப்புறப்படுத்தி சிறுத்தையை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தபகுதி முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு அருகிலான பகுதி என்பதால் அடிக்கடி வனவிலங்குகள் வரும் என்பதாக மக்கள் கூறினாலும் வீட்டிற்குள் சிறுத்தை புகுந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.