Advertisment

நள்ளிரவில் இறந்த சிறுத்தை... விசாரணையில் வனத்துறையினர்!

The leopard passed at midnight; Foresters under investigation

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் சரணாலயமாக உள்ளது. இந்த வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் சிறுத்தை, புலிகள், யானைகள், காட்டெருமைகள், மான்கள், கரடிஎன ஏராளமான விலங்குகள் வசித்துவருகின்றன. இந்த நிலையில் திம்பம் வனப்பகுதியில் அரேபாளையம் என்ற கிராமத்திற்குச் செல்லும் வழியில் ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவு அடையாளம் தெரியாத ஏதோ வாகனம் மோதி சுமார் 4 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தை அந்த இடத்திலேயே இறந்து கிடந்தது.

Advertisment

இதுபற்றி தகவல் கிடைத்ததும் தலமலை வனச்சரகர் உள்ளிட்ட வன அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்தனர். மருத்துவக் குழுவும் வரவழைக்கப்பட்டு அதே இடத்தில் இறந்த சிறுத்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து, பின்னர் அந்தச் சிறுத்தையின்உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது. இரவு நேரத்தில் சென்ற வாகனம் மோதியதே சிறுத்தை இறப்புக்கு காரணமா? அல்லது வெளி நபர்கள் யாராவது வேட்டையில் ஈடுபட்டு சிறுத்தையைக் கொன்றார்களா என்பதை வனத்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

Advertisment

died leopard forest Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe