nn

கிருஷ்ணகிரி மாவட்டம் வனப்பகுதிகள் மிகுந்த மாவட்டங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த வனப்பகுதியில் ஏராளமான யானைகள், சிறுத்தைப் புலி, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிருஷ்ணகிரியின் புறநகர் பகுதியான குல்நகர் மற்றும் அதியமான் உள்ளிட்ட இடங்களில் சிறுத்தைப்புலி நடமாட்டம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள சிசிடிவி கேமராக்களிலும் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக நேற்று பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளிலும் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். மேலும் சிறுத்தைப் புலியின் காலடி தடமா? எனபரிசோதனை செய்யப்பட்டது. அதன் பின்னர் அதுசிறுத்தைப் புலியின் காலடித் தடம்தான் என்பதுஉறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிறுத்தைப் புலியை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதே சமயம் பொதுமக்கள் இரவு நேரத்தில் வீட்டை விட்டுவிட்டு வெளியே வரும்போது எச்சரிக்கையுடன் வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி புறநகர் பகுதியில் சிறுத்தைப் புலி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்