ADVERTISEMENT

காட்டைப் பார்த்ததும் கூண்டிலிருந்து சீறிப் பாய்ந்த சிறுத்தை!

11:33 PM Feb 03, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை மாவட்டம், மதுக்கரையை அடுத்த வனப்பகுதியை ஒட்டியுள்ள காந்தி நகர், மட்டப்பாரை ஆகிய மலைக் கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிந்த சிறுத்தை ஒன்று, அந்தப் பகுதிகளில் உள்ள ஆடுகள் மற்றும் நாய்களை வேட்டையாடி வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், உடனடியாக அந்த இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் சிறுத்தையைப் பிடிப்பதற்காக பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தனர். அந்த கூண்டுக்குள் மாமிச உணவுகளை வைத்திருந்தனர்.

ADVERTISEMENT

இதனையடுத்து, ஆடுகளை வேட்டையாட மீண்டும் அங்கு வந்த சிறுத்தை ஏற்கனவே வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் வசமாகச் சிக்கியது. இதனையறிந்த வனத்துறையினர் பிடிபட்ட சிறுத்தையைக் கூண்டோடு எடுத்துச் சென்றனர். பின்னர், அந்தச் சிறுத்தைக்கு மருத்துவ சிகிச்சைகள் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறுத்தையை அடர் வனப்பகுதிக்குள் விடுவதற்காக, அதைப் பாதுகாப்பாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியான தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு வந்து, சிறுத்தையை விடுவித்தனர்.

காட்டைப் பார்த்ததும் தனது வாழ்விடம் வந்து விட்டது எனக் கூண்டிலிருந்து வெளியே ஆவேசமாக வந்த சிறுத்தை சீறிக் கொண்டே வேகமாகக் காட்டுக்குள் பாய்ந்து சென்றது. அந்த வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தைகள், புலிகள் வாழ்ந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT