Advertisment

முதலில் தலைகாட்டிய சிறுத்தை; உடனே வந்த கரடி; வைரலாகும் வீடியோ

The leopard that first showed its head; The bear that came immediately; A viral video

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது. நடமாடும் சிறுத்தையின் படத்தை வனத்துறை வெளியிட்டுள்ளது. 8 மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுத்தையை பிடிக்கும் பணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisment

மயிலாடுதுறையில் சிறுத்தை புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் அதேபோல் ஊட்டியில் குடியிருப்பு பகுதி ஒன்றில் சிறுத்தை ஒன்று நடமாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோ காட்சியில் சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல, அடுத்த நொடியே கரடி ஒன்றும் அதே குடியிருப்பு பகுதிக்கு வந்தது. இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisment
leopard ooty
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe