சிறுமியை தூக்கிச் சென்ற சிறுத்தை; இரண்டாவது நாளாக தேடும் பணி தீவிரம்

Leopard carries off girl; search intensifies for second day

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் அமைந்துள்ளது. இங்குக் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்தம்பதியர் குடியேறி உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதியின் 4வயது பெண் குழந்தை நேற்றுவீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த சிறுத்தை ஒன்று அந்த சிறுமியை, அவரது தாய் கண்முன்னே தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் வனத்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பெயரில் சிறுமியை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இரவு நேரம் என்பதால் டார்ச் லைட் அடித்து சிறுமியை தேடும் பணி நடைபெற்றது.

இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்குக் குழுமி உள்ளனர். இன்று (21/06/2025) இரண்டாவது நாளாக காலை 7:00 மணி முதல் வனத்துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோப்பநாய் மற்றும் ட்ரான் மூலமாகவும் தேடும் பணி நடைபெற்று வருகிறது. சிறுமி தற்போது வரை கிடைக்காத நிலையில் தேயிலை தோட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று தேடி வருகின்றனர். தற்போது அந்த பகுதியில் மழை பொழிந்து வருவதால் தேடுதல் பணி தொய்வடைந்து உள்ளது. வனத்துறையினர் சாராட்சியர் மற்றும் வனத்துறை உயர் அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட்டு ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.

Forest Department leopard Valparai wildfire
இதையும் படியுங்கள்
Subscribe