
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லலித் தயாரிப்பில், விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 19 ஆம் தேதி வெளியான படம் லியோ. பல்வேறு சர்ச்சைகளைத் தாண்டி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தின் வெற்றிவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிலையில் மாலை 7 மணிக்கு மேல் விழா தொடங்கவுள்ளது. விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொள்கிறார்கள். இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதவாறு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அரங்கத்தின்வெளியில் மதியம் முதலே ரசிகர்கள் குவியத் தொடங்கிவிட்டனர். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகாவில் இருந்தும் ரசிகர்கள் வருகை தந்துள்ளனர்.
மேலும் பல்வேறு நிபந்தனைகளுடன் 5 கட்ட சோதனைகளுக்கு பிறகே உள்ளே அனுமதித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள 6 மணிக்கு விஜய் நீலாங்கரையில் உள்ள தனது வீட்டில் இருந்து வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் கூட்டம் இதனால் அதிகரிக்கும் என இன்று மாலை 3 மணிக்கே அவர் ரகசியமாக கார் ஒன்றில் நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)